Published 10 days ago • loading... • Updated 10 days ago
‘அண்ணாமலை பல்கலைக்கழக நிலத்தை விற்க வேண்டும்’ - எம்.எல்.ஏ பேச்சுக்கு மா.கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
Summary
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிலத்தை விற்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘1928ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அண்ணாமலைச் செட்டியார் அரசுடன் இணைத்து பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக Annamalai University Act, 1928 (Madras Act I of 1929) அடிப்படையில் 1 ஜனவரி 1929 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, இசை, வரலாறு, அறிவியல், விவசாயம், பொறியியல், மருத்துவம் உள்ளிடட்ட துறைகளுடன் ஆல் போல் தழைத்து வளர்ந்தது. இந்த சூழலில் பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் நிர்வாகச் சிக்கல்களைத் தொடர்ந்து, இப் பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று 2013-ல் அன்றைய சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய அரசியல் தலைமை குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை எழுப்பினார்.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.