Published 16 days ago • loading... • Updated 16 days ago
'கரூருக்கு போனால் அவர் இருக்கக் கூடாது... சட்டப்பேரவைக்கு போனால் இவர் இருக்கக் கூடாது...'-வல்லம் பஷீர் காட்டம்
Summary
பட்ஜெட் கூட்டத்தொடர் நேரத்தில் அரசியல் பழிவாங்கல் காரணமாகவே உதயநிதி நேற்று கைது செய்யப்பட்டதாக வல்லம் பஷீர் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் நக்கீரன் டிவிக்கு அளித்த நேர்காணலில் இது குறித்து பேசுகையில், ''சட்டமன்றத்தின் மிக முக்கியமான பட்ஜெட் கூட்டத்தொடர் கூட இருக்கிறது என்ற சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வரக்கூடாது என்பதுதான் இந்த அவசரக் கைதின் பின்னணியில் இருக்கும் மிக முக்கியமான மாஸ்டர் பிளான். எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்திற்கு வந்தால் காவிரி நதிநீர் விவகாரம் குறித்தும், டெல்டா விவசாயிகளின் அவதி குறித்தும் தொடர்ச்சியான முழக்கங்களை அவையில் எழுப்புவார் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அது ஆளும் அரசுக்கு மிகப் பெரிய அரசியல் நெருக்கடியையும், சங்கடத்தையும் சட்டமன்றத்திற்குள் உருவாக்கும். அவையில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்று சொன்னால், பட்ஜெட் கூட்டத்தொடரை மிகவும் சுமுகமாக நடத்தி முடித்துவிடலாம், காவேரி விவகாரம் போன்ற ஜீவாதாரப் பிரச்சினைகளுக்குக் கூடுதலாகப் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் அரசுக்கு இருக்காது.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.